Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு தொடங்கி நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.ஊழல் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்து வருவதால் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்ற மின் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழை தொடர்ந்து நீடித்து கூடியிருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |