Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்…. பொதுமக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான பால், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீர் உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது.

அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக கனமழை காரணமாக மழை நீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் நீர்நிலைகள், மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் அருகில் நின்று செல்பி எடுக்க கூடாது.

தெருவிளக்கு மின் கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்புப் பெட்டிகளை தொடுதல் அல்லது மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற உதவி எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.044-25619204, 044 -25619206, 044 -25619207, 044 -25619208, 044 – 25303870 என்ற தொலைபேசி எண்களிலும் மற்றும் 94454 77205, 94450 25819, 94450 25280 மற்றும் 94450 25821 என்ற வாட்ஸ் அப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |