Categories
சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையால் சிக்கி கொண்ட செங்கல்பட்டு…. மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று ..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் அண்டை மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கற்பனைக்கும் எட்டாத வகையில் அதிகரிக்கிது கொண்டே செல்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகல் வரை புதிதாக 239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7000யை கடந்திருக்கின்றது.

இதனால் தற்போதுவரை மொத்தமாக 7 ஆயிரத்து 181 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிப்பு அதிகரிப்பதை போல குணமடைவர் விகிதமும் கணிசமாக  உயர்ந்துகொண்டே இருக்கின்றது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,954 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதால் 3,091 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா பாதித்த 136பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |