சென்னை பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியம், புகைப்படம், குறும்படம் சமூக வலைதளங்களில் போட்டிகள் மாநகராட்சி சார்பில் நடைபெறுகின்றது. இது பற்றி பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நம் சென்னையில் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்கு ஓவிய போட்டி புகைப்பட போட்டி சோசியல் மீடியாவில் மற்றும் குறும்பட போட்டி நடத்த இருக்கின்றது.
ஓவியப்போட்டியில் தேசியக்கொடியை தலைப்பாக வைத்து ஓவியங்கள் வரைந்தும் புகைப்பட போட்டியில் சென்னை கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் புகைப்படங்களை எடுத்தும் குடும்ப போட்டிகளில் சென்னை எனும் தலைப்பில் கலாச்சார குறும்படம் எடுத்தும் அனுப்பலாம்.
மேலும் சமூக வலைதள ரீல்ஸ் சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் எனும் தலைப்பில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக சோசியல் மீடியாவில் இயற்கையான படம் சிறந்த ரில்சுக்கு பரிசு உண்டு. பொதுமக்கள் தங்களது தகவல்களை shorturl.at/dLU89 என்னும் இணையதளத்தில் விவரங்களை பூர்த்தி செய்து படைப்புகளை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் போட்டிகள் பற்றிய அறிவிப்புகளுக்கு சென்னை மாநகராட்சியின் twitter instagram மற்றும் பேஸ்புக் பக்கங்களை பின் தொடரலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.