கோபிசெட்டிபாளையம் பகுதியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சென்னையில் இருந்து வந்து ஐந்து பேரை விச்சியருவாளுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அதே அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் வாய்க்கால் அருகே காரை நிறுத்திவிட்டு வாய்க்காலில் குளித்தனர். அப்போது அந்த 5 பேரும் கோபிசெட்டிபாளையம் பகுதில் இரவு நேரத்தில் கொள்ளையடிப்பதை குறித்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் அவர்கள் வந்த காரை பார்த்தபோது காரின் பின்புறம் பெரிய அளவிலான பட்டாக்கத்திகளும் வீச்சருவாள் இருப்பது தெரியவந்தது.
அதைதொடர்ந்து கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து கோபி காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் கோபி இன்ஸ்பெக்டர் திரு. சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் உடனடியாக அங்கு வந்து வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்த சென்னையை சேர்ந்த ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.