நிவர் புயல் காரணமாக இன்று மற்றும் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று மகாபலிபுரம் காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் 24 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதுமாக வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் மட்டும் 30 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே புயல் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்ட 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.