சென்னையிலிருந்து 340 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.. தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது..
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையிலிருந்து 340 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இன்னும் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி இது நகர்வதாக கூறப்பட்டுள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..