Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில்…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…..!!!!

சென்னையில் குடிநீர் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டத்தை “சிட்டி ஆப் 1000 டேங்ஸ்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளது. இதில் சென்னை ஐஐடி பேராசிரியர்கள், ஓஜ் ஆர்க்டெக்ஸ், மெட்ராஸ் டிரஸ், பயோமெட்ரிக் வாட்டர் ஆகியவற்றை நிபுணர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள், சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் முழுவதுமாக வற்றும் அபாயம் இருப்பதாக கூறினார்கள்.

மேலும் நிலத்தடி நீர் ஆதாரங்களை அதிகரித்து அத்துடன் வெல்லம் மற்றும் கழிவு நீர் மாசு இவற்றால் ஏற்படும் அபாயங்களை தவிர்த்து வளர்ச்சியை பொறுத்து இந்த அபாயத்தை மாற்றிக் காட்டும் திட்டத்தை தான் இந்த அமைப்பு உருவாகியுள்ளது. இந்தத் திட்டம் சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் கான்வெண்ட் இல் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலமாக சென்னையில் நீராதாரம் வீணாவதை குறைத்து அதை முற்றிலும் தவிர்ப்பதற்கான வியூகத்தை உருவாக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு ஏற்றவாறு கலாச்சாரத்துக்கு பொருத்தமான திட்டமிடலும் உள்ளூர் வாசிகள் மற்றும் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இருப்பதாக இந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |