தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை கடலோர மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, காஞ்சி தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.