Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் அதிகரித்து வரும் பெட்ரோல் திருட்டு”…. காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…? எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!!

சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல் திருட்டு அதிகரித்து வருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள்.

தமிழகத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது பெட்ரோலின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதால் திருடர்கள் திருடும் பொருட்களின் பட்டியலில் பெட்ரோலும் இடம் பெற்றிருக்கின்றது. திருடர்கள் மற்ற பொருட்களை திருடி தங்கள் தேவை பூர்த்தி செய்து கொள்வதற்கு பதிலாக தற்பொழுது பெட்ரோலை  திருடி தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள்.

சென்னையில் சாலை ஓரங்களில், தெருக்களில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களில் நள்ளிரவு நேரத்தில் திருடர்கள் பெட்ரோலை திருடி செல்கின்றார்கள். இதனால் சாமானிய மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றார்கள். ஆகையால் மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல்களை திருடும் திருடர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Categories

Tech |