சென்னையில் மின்கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 27ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது. அதாவது, சென்னை தவிர அதிமுக அமைப்பு ரீதியிலான மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்ட நடைபெறும் நிலையில் வருகின்ற 27ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரகத்திற்கு அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அல்லது நாளைக்குள் அதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.