சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் எனவும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 85,477 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதற்காக இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். இதில் பெரும்பாலான கடைகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். அப்படி வைக்காத கடையின் உரிமையாளருக்கும் நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடையின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.