Categories
மாநில செய்திகள்

சென்னையில் இந்த 6 இடங்களில் திடீர் கட்டணம் உயர்வு… ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி..!!

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் எழும்பூர் உள்ளிட்ட ஆறு நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் திடீரென்று உயர்த்தப்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்: ” ரயில் பயணிகளிடம் இருந்து வரும் தொடர் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்டுகளை வழங்க ரயில்வே நிர்வாகம் அனுமதித்தது.

கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதையடுத்து சென்னை ரயில்வே கோட்டத்தில் நேற்று முதல் ஆறு முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடியில் ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்காமல் இருந்து வந்தது. தற்போது டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டணம் ஓர் தற்காலிக நடவடிக்கையாகும். இது பயணிகளின் பாதுகாப்புக்காகவும், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கொரோனாவைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை. இந்த கட்டண உயர்வு மே 17-ம் தேதி வரை அமலில் இருக்கும் ” என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |