சென்னை தீவுத்திடலில் 365 நாட்களும் பொருட்காட்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தீவு திடலில் பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், இனி 365 நாட்களும் தீவுத்திடலில் நிகழ்ச்சி நடத்த ஆலோசனை கூறியுள்ளார். சென்னை தீவுத்திடலில் ஹோட்டல், பயண வழி உணவகம், பொருட்காட்சி மைதானம் ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தார். இதன்பிறகு தமிழ்நாடு ஓட்டலில் தயாரிக்கப்படும் உணவுகள், zomoto, ஸ்விகி ஆகிய நிறுவனங்கள் வாயிலாக மக்கள் ஆர்டர் செய்து சாப்பிடும் வகையில் வடிவமைக்கப்படும்.
ஓட்டல் வளாகம், உணவு சாப்பிடும் இடம், உணவு பொருட்கள் சேமிப்பு கிடங்கு போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்கவும், பொருட்காட்சி மைதானத்தில் உள்ள உணவகத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொருட்காட்சி மைய வளாகத்தை பார்வையிட்டு, ஆண்டு முழுவதும் பொருட்காட்சி தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கி வருவாயை ஈட்ட வகை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.