சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் இன்று(ஜூன் 21) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.நடப்பாண்டு ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்த அரையாண்டுக்கு, ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், பயண அட்டைகள் 40 மையங்களில் இன்று முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். டோக்கனை பெற்றுக்கொண்டு 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர்சாதன வசதி இல்லாத சென்னை மாநகர போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.