சென்னையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நடைபெறும்.
அதனால் சென்னையில் குறிப்பிட்ட ஐந்து பகுதிகளில் மட்டும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடி நீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள 8144930905 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.