Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று இரவு…. தீவிர போலீஸ் பாதுகாப்பு… உஷாரா இருங்க..!!!!

நாளை புது வருடம் 2022 பிறக்க உள்ளது. வருடந்தோறும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வந்த நிலையில் கொரோனாவிற்கு பின்னர் ஒன்றாக கூடி கொண்டாட முடியாமல் போனது. இந்த வருடமும் அதேபோல் ஒமைக்ரான் பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு முதல் சென்னை மாநகரம் முழுவதுமாக 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாகவும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |