Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று (ஏப்ரல் 2) மின்தடை ஏற்படும் பகுதிகள்…. வெளியான அறிவிப்பு…!!!

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (ஏப்ரல் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் மற்றும் பெரிதாக வளர்ந்து தொங்கும் பெரிய மரங்களில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தும் தேவையில்லாத மின்கம்பிகளை அகற்றுவதற்காக, மின் வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த பணிகளை மேற்கொள்ளும் போது மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

இந்நிலையில் மின்தடை நேரமானது குறைந்த பட்சம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். மேலும் அதிகபட்சமாக காலை 9 மணி முதல் 6 மணி வரை இருக்கும். அந்த வகையில் மின்தடையானது ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மாதத்தில் ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இன்று (ஏப்ரல் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அம்பாள் நகர், டில்லி பாபு நகர், பிரபு நகர், கணபதி நகர், ஆதிமூலம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட வேலைகளை மின்தடை ஏற்படும் முன்னரே செய்து முடிக்க வேண்டும் என்று மின்வாரியம் சார்பாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |