சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ல் இருந்து 673ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் – 103, செங்கல்பட்டு – 12, கள்ளக்குறிச்சி -3, நாமக்கல் – 2, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,101ல் இருந்து 1,128ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.