Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை…. மின் வினியோகம் நிறுத்தம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம் அதன்படி சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பல்லாவரம் பகுதி: பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, சீனீவாச பெருமாள் கோயில் தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு, செல்லம்மாள் தெரு, ஆஞ்சிநேயர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். சிறுசேரி பகுதி: சிறுசேரி கிராமம், எக்ஸ்.எல் ரியல் அப்பார்ட்மென்ட், சபரி பிளாட்ஸ், வேல்ஸ் கல்லூரி சாலை.

பெரம்பூர் /காகித ஆலை ரோடு பகுதி: காமராஜ் தெரு, ராகவன் தெரு, மல்லிப்பூ நகர், பாதம் தெரு, ஏழுமலை தெரு, ஜானகிராம நகர் 4 மற்றும் 5வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.பொன்னேரி பகுதி; தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மற்றும் கங்கன் தொட்டி பகுதிகள்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Categories

Tech |