தமிழகத்தில் மாதம் தோறும் அந்தந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும். மின் பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்குள் முடிவடைந்தவுடன் மின் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பியம், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தெருக்களிலும், வியாசர்பாடி, பெரியார் நகர், பெரம்பூர் நெடுஞ்சாலை, திருவிக நகர், பி.பி. சாலை மற்றும் மாதரவரத்தின் ஒரு சில பகுதிகளில் மின் தடை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Categories