தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால், மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான, மின் தடை நிறுத்தப்பட்டிருந்தது.
தேர்தல் நிறைவடைந்ததையொட்டி மேலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று (பிப்.23) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் 2 மணிக்கு மேல் மின் வினியோகம் கொடுக்கப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் :-
லீலாவதி நகர், ஜே.ஜே. நகர், ஏரிக்கரை ரோடு, குமரன் நகர், மூகாம்பிகை நகர், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, ஆவடி ரோட்டில் ஒரு பகுதி, வி எஸ் டி, பாரிவாக்கம் சிக்னல் கோவூர் சீனிவாசா நகர், கொல்லச்சேரி தெருக்கள் திருவேற்காடு காடுவெட்டி, ஆவடி மெயின் ரோடு, மாதா நகர், தேவகி நகர், சாய் நகர், பாபு கர்டன், வீரராகவபுரம், மேத்தா நகர், அருணாசலம் நகர் திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், வழுதலம்பேடு கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.