சென்னையில் இன்று புதிதாக 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், தமிழகத்தில் இன்று 790 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,24,776 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2,27,353 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 897 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், 8,05,136 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 7,432 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 12,208 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் தற்போது கொரோனாவுக்கு பேர் 2,231 சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.