சென்னையில் இன்று மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியத் துறை அறிவித்துள்ளது. அதாவது கண்ணகி நகர், எழில் நகர், துரைப்பாக்கம், அசோகா தெரு, எல்.என்.பி தெரு, வில்லிவாக்கம் சாலை, விவேகானந்தா தெரு, திருவள்ளுவர் நகர், கணேஷ் நகர், ரமணி நகர், வீனஸ் நகர், கொளத்தூர், பெரம்பூர், கல்கி பிளாட்ஸ், திருவள்ளுவர் தெரு, பாரதிதாசன் தெரு, பவானி அம்மன் கோவில் தெரு, ஏரிக்கரை தெரு, துர்கா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கடப்பேரி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.