சென்னையில் இன்று (மார்ச்.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னையின் சில பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
கே.கே நகர் பகுதி:-
சூளைமேடு ராதகிருஷ்ணன் நகர், சூளைமேடு சாலையின் ஒரு பகுதி, ரங்கராஜபுரம் டேங்க் தெரு, கோடம்பாக்கம் கங்கா நகர் வடபழனி வெள்ளாள தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பட்டினம்பாக்கம் பகுதி: சீனிவாசபுரம், டுமிங் குப்பம், சாந்தோம் நெடுஞ்சாலை, மந்தவெளி பாக்கம் மந்தவெளி பகுதி, சந்தோம் பகுதி கச்சேரி ரோடு, நொச்சிக் குப்பம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி:-
ராஜ்பவன் பகுதி, தொழிற்பேட்டை கிண்டி, ஆதம்பாக்கம் பகுதி, ஆலந்தூர் பகுதி, வாணுவம்பேட்டை பகுதி, புழுதிவாக்கம் பகுதி, தில்லை கங்கா நகர் பகுதி, நங்கநல்லூர் பகுதி, மூவரசம்பேட்டை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நங்கநல்லூர் பகுதி, கங்கா நகர் பகுதி, புழுதிவாக்கம் பகுதி, மூவரசம்பேட்டை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் பகுதி:-
வேங்கைவாசல், சித்தலம்பாக்கம் நொத்தன்சேரி, மேகலா நகர், பாரதி நகர் மற்றும் பெத்தேல் நகர். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் கோட்டத்துக்கு உள்பட்ட கோபி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று (மார்ச்.4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:-
கோபி பேருந்து நிலையப் பகுதி, பா.வெள்ளாளபாளையம், மொடச்சூா், குள்ளம்பாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், நாகதேவன்பாளையம், வேட்டைக்காரன்கோயில், கொரவம்பாளையம், பழையூா், பாரியூா், நன்செய்கோபி, உடையாம்பாளையம்.