தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் சென்னையில் இன்று (டிசம்பர் 03) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி சென்னை, தரமணி பகுதியில் சி. எஸ். ஐ. ஆா் சாலை, எம். ஜி. ஆா் நகா், தரமணி, கானகம் பிரதான சாலை, வி. வி கோயில் தெரு ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் பரமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 3 -ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அன்னூர் மற்றும் பதுவம்பள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, கரியாம்பாளையம், தெலுங்குபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அன்னூர் நகரம், பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள தேவனூர் புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேவனூர் புதூர் ,செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணபுரம் , இராவணபுரம் , ஆண்டியூர், சின்ன பொம்மன் சாலை, பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லகுண்டாபுரம், வளையபாளையம்,எஸ் நல்லூர், அர்த்தநாரிபாளையம் மற்றும் புங்கமுத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.