Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் தினந்தோறும் மின்கசிவு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாகவும் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று மின் வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக இன்று (ஜன.6) சென்னையிலுள்ள முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் பெரம்பூர், ஆவடி/வடக்கு, கீழ்பாக்கம், மாத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் இந்த பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பூர் பகுதியிலுள்ள ஜெய்பீம் நகர் 1வது தெருவிலும், ஆவடி/வடக்கு பகுதியில் உள்ள முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், பி.எஸ்.என்.எல் – சி.டி.எச் சாலை, எச்.வி.எப் சாலை, ஆவடி பஸ் டெப்போ, செக் போஸ்ட், என்.எம் சாலை, நந்தவன் மேட்டுர், கஸ்தூரி பாய் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் கீழ்பாக்கம் பகுதியிலுள்ள கீழ்பாக்கம் கார்டன் விரிவு, கே.எச் ரோடு, தாகூர் நகர், அயனாவரம், அண்ணா நகர் ஒ மற்றும் எல் பிளாக், நியூ கொளத்தூர் துணை மின் நிலையம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அத்துடன் மாத்தூர் பகுதியிலுள்ள சின்ன மாத்தூர், எம்.எம்.டி.ஏ 1வது மற்றும் 2வது மெயின் ரோடு பகுதி, ஓமகுலம் தெரு, சக்தி நகர் மற்றும் நேரு நகர், பெருமாள் கோயில் தெரு மற்றும் டெலிகாம் நகர், அச்சிஸ் நகர் மற்றும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜன.6) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |