தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை:
பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. வில்லிவாக்கம்-ஐ.சி.எப் பகுதி: கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, இராஜிவ் காந்தி நகர், வெல்கம் காலனி, மண்ணடி தெரு, மண்ணடி ஒத்தவடை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.