கொரோனா பரவல் மெல்ல மெல்ல மீண்டும் அதிகரித்து வருவதால், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடைகளை அடைக்க மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில், ஜாம் பஜார், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு இன்று முதல் 9ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை. புரசைவாக்கம் டவுன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை தடை. ரெடிஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொத்தவால்சாவடி சந்தை செயல்பட தடை.
ஜாம்பஜார் பாரதி சாலை, ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை தடை . பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார் ஆகிய இடங்களில் தடை. என்.எஸ்.சி சாலை குறளகம் முதல் தங்கச்சாலை சந்திப்பு வரை தடை. ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க்- காமாட்சி அம்மன் கோயில் வரை தடை. அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக நகர் சந்திப்பு வரை தடை.