சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் 80 அடி சாலை வரை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. போரூர் -கோடம்பாக்கம் மேம்பாலம் வரை செல்லும் வாகன போக்குவரத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. கோடம்பாக்கம் மேம்பாலம் -போரூர் சாலிகிராமம் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சிக்னல் வரை சென்று, இடது புறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வழியாக ராஜமன்னார் சாலை வழியாக செல்லலாம்.
வடபழனி சிக்னலில் இருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலைக்கு வலது புறமாக திரும்பக்கூடாது. இது போன்று மற்ற பகுதிகளிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் ஒரு வருடத்திற்கு தொடரும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.