Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

சென்னையில் இன்று முழுவதும் கனமழை நீடிக்‍கும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்‍குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று நாள் முழுவதும் மழை தொடருமெனவும், கனமழை விட்டு விட்டு நீடிக்குமெனவும், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |