சென்னையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், இன்று மட்டும் 4,979 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,70,693ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 85,859ஆக உள்ளது. இன்று மேலும் 78 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 2481ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 4,059பேர் குணமடைந்ததால் மொத்த எண்ணிக்கை 117915ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 50ஆவது நாளாக உயிரிழப்பு இரட்டை இலக்கில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.