தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்குவதால், அங்கு இருக்கும் 15 மண்டலங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படுகின்றது.
ஆனாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையை பொறுத்தவரை 66,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 41,309 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். 1030 பேர் உயிரிழந்துள்ளார். இன்றைய பாதிப்பு குறித்த தகவல் வெளியானதில், தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1,731 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 68,254பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.