Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று(10.06.22) இளைஞர்களுக்கு…. மறக்காம உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஜூன் 10ஆம் தேதி (இன்று) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில் 35 க்கு உட்பட்ட எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டயக் கல்வி தகுதி உடைய அனைவரும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |