சென்னையில் இயல்பைவிட 83% மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது . ஒரே மாதத்தில் 105 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டியதால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. அந்த மழை பொழிவை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை மழை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நவம்பர் ஏழாம் தேதி பெய்த மழையில் நுங்கம்பாக்கத்தில் ஒரேநாளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.
சென்னை மாவட்டம் முழுவதும் நவம்பர் மாதத்தில் சராசரியாக 90 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அளவு 60 சென்டிமீட்டர் ஆக இருந்த நிலையில் தற்போது 112 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பருவ மழை எப்போது பெய்யும் மழையின் இயல்பை விட 83 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.