சென்னையில் மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி கடைகளிலும் விற்பனைக்கு அரசு உத்தரவின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். எனவே அரசு உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.