சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளம் உள்ளன.அந்தக் கடைகள் தொழில் செய்வதற்கு கட்டாய மாநகராட்சி இடம் உரிமை பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை தொழில் வரியை நிறுவனங்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
தற்போது தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.எனவே இதுவரை தொழில் உரிமம் பெறாமல் உள்ளவர்கள் உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும்.வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வரி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அப்படி தவறும் பட்சத்தில் அந்த கடைகளை மூடி சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொழில் உரிமம் பெறாமல் இருப்பதாகவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.