இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் மத கலவரத்தை தூண்டுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த சூழலில் தமிழக உட்பட பதினைந்து மாநிலங்களில் பிஎப் ஐ அலுவலகங்களில் நிர்வாகிகள் வீடுகளில் எம்எல்ஏ அமலாக்கத்துறை போன்றவை இணைந்து கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கடந்த 27ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 250 பேர் கைதாகி உள்ளனர்.
இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் பிஎப் ஐ அமைப்பை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து ஐந்து வருடங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கிறது. மேலும் பிஎப் ஐ அமைப்பிற்கு தொடர்புடைய எட்டு அமைப்புகளுக்கும் ஐந்து வருடம் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் கூறியுள்ளார். இந்த சூழலில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பி எப் ஐ அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.