சென்னையில் எவ்வளவு கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் நேரு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் அவர்கள் அதிகமாக மழைபெய்யும் மாவட்டங்களை தேர்வு செய்து அம்மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்கள் குறித்த விவரம் அனைத்தும் ஏற்கனவே தெரியும்.
எனவே இந்த பகுதிகளில் தண்ணீர் பம்பு வைத்து நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது எனவும் கன மழை காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அவர் கூறினார். சென்னையில் 700 இடங்களில் பம்புகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 500 இடங்களில் குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே தண்ணீர் தேங்கிய அனுபவத்தைக் கொண்டு தற்போது தூரித நடவடிக்கை எடுக்க அனைத்து பணிகளும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.