சென்னையில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு குண்டுகளும் வெடித்து புகை கிளம்பியதால் பெரும் பதட்டம் உருவானது.
இதே போல் சென்னை விமானநிலையத்தை அடுத்துள்ள குழிச்சலூரில் இரவுவேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு வீசியதாக போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. தப்பி ஓடிய மற்றவர்களை பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.