தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்தும்,வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.
அதன்படி சென்னையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை ஏற்கிறார். அதனைப்போலவே கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்த உள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இந்த போராட்டம் இன்று நடைபெற உள்ளது. அதனால் அதிமுக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஒன்று திரண்டு உள்ளனர். காலை 10 மணி அளவில் இந்த போராட்டம் தொடங்குகிறது.