சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 408 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்த பின் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.