சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். விழாவில் கருணாநிதியின் சிலை முன்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன், எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.