ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும்.
இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளான இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி ஆகிய பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும். சென்னையில் 5:13 முதல் 5:44 வரை இந்த கிரகணம் நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்பதற்காக பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.