சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் தொற்று எண்ணிக்கை இருமடங்காகும் நாட்கள் அதிகரித்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது:
கடுமையாகப்பட்ட ஊரடங்கு மற்றும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பால் சோதனை நேர்மறை விகிதமானது 37 சதவீதத்திலிருந்து 16.5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.மார்ச் முதல் ஜூன் 6ஆம் தேதி வரையிலான காலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர 25 நாட்கள் ஆனது இந்த நிலையில் இது அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவெற்றியூர் மண்டலத்தில் 26.8 நாட்களிலும், மணலி மண்டலத்தில் 27.3 நாட்களிலும், மாதவரத்தில் 31.7 நாட்களிலும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 32.7 நாட்களிலும், தொற்று இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.அதேபோல ராயபுரத்தில் 57.1 நாட்களிலும், திரு.வி.க மண்டலத்தில் 32.4 நாட்களிலும், அம்பத்தூர் மண்டலத்தில் 23.2 நாட்களிலும், அண்ணாநகர் மண்டலத்தில் 27.4 நாட்களிலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 32.2 நாட்களிலும், தொற்று இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கோடம்பாக்கத்தில் 28.8 நாட்களிலும், வளசரவாக்கத்தில் 22.2 நாட்களிலும், ஆலந்தூரில் 20.2 நாட்களிலும், அடையாறு மண்டலத்தில் 24 நாட்களிலும் பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.அதேபோல பெருங்குடி மண்டலத்தில் 29.8 நாட்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 22.4 நாட்களும், தொற்று இருமடங்காக உயிரை எடுத்துக்கொண்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.