தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான்வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் 10 நாட்களில் தொற்று பல மடங்கு அதிகரிக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்டர் அதிகரிப்பது தொடர்பாக நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு சென்னையில் மீண்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.