Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொட்டிய கனமழை… விமான நிலையத்தில் புகுந்த மழைநீர்… பயணிகள் அவதி…!!!

சென்னையில் நேற்று பெய்த கனமழையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை மற்றும் மீனபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலமாக அகற்றினர். அதனால் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் வருகை பகுதியில் உடமைகள் எடுக்கப்படும் கன்வேயர் பெல்ட் இருக்கும் பகுதியில் மழைநீர் புகுந்தது.

அதனை கண்ட விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் மூலமாக மழை நீரை அகற்றும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர். மழை தொடர்ந்து கொட்டியதால் மழை நீரை அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |