Categories
அரசியல்

சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் பலி …!!

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர் .

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 பேர் சிகிச்சை பலயின்றி உயிரிழந்த நிலையில், தமிழகத்தில்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று 26 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1146 ஆக உயர்ந்துள்ளதாக நேற்று சுகாதாரதுறை அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரைக்கும் கொரோனா  தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளார்கள். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தலா 3 பேர், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவர் மொத்தம் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 

Categories

Tech |