Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னையில் சீரியல் நடிகர் திடீர் தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள் சிலர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த இந்திரகுமார், தனியார் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நண்பர்களுடன் சினிமா பார்த்துவிட்டு இரவு நண்பரின் வீட்டில் தூங்கியுள்ளார். காலையில் வெளியே வராததால் நண்பர் அறைக்குச் சென்று பார்த்தபோது இந்திரகுமார் பேனில் தூக்கிட்டு தொங்கிய சிறையில் இருந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |