Categories
மாநில செய்திகள்

சென்னையில் சூப்பர் பிளான்… இனி மக்களுக்கு இந்த பிரச்சனை இல்லை…!!!

சென்னையில் ட்ரோன்  மூலம் கொசு ஒழிப்பு திட்டத்தை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்துள்ளார்.

சென்னையில் கொசு பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த கொசுக்களால் காலரா, டெங்கு மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. தமிழக முதலமைச்சரான ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சென்னையில் உள்ள நீர்நிலைகள் மீட்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஏரி மற்றும் ஆறுகளில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் மருந்து  தெளிக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அடையாறு பசுமைவழிச் சாலை பகுதியில் உள்ள வங்கி கால்வாயில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்களும், தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு கூறியபோது, “சென்னை மாநகராட்சி சார்பில் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ட்ரோன்  மூலம் மருத்து தெளிக்கும்  பணி தொடங்கப்பட்டுள்ளது. 251 கையினால் கொண்டு புகை செல்லும் புகைப்பரப்பும்  எந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகைப்பரப்பும்  இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் குடிசைப் பகுதிகளில் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் சென்னையில் பங்கிங் கால்வாய், ஓட்டேரி நல்லா, அடையாறு ,கூவம் போன்ற கால்வாய்களில் மற்றும் 31  சிறிய கால்வாய்களில் ட்ரோன்  பயன்படுத்தி சுமார் 113 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொசுப்புழு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

Categories

Tech |